கண்ணீர் இருப்பில்லை
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள் ... கண்ணீர் இருப்பில்லை அலைகடலே உன் கரையில் விளையாடியது குற்றமென பிஞ்சுகளின் உயிரோடு விளையாடிவிட்டாய். உன் மடியில் வலை வீசியது குற்றமென மீனவர்களின் உயிரை விலை பேசிவிட்டாய். குழந்தைகளை பிரித்து பெற்றோர்களை அனாதயாக்கினாய் பெற்றோரை பிரித்து குழந்தைகளை அனாதயாக்கினாய். இன்னும் யாரை பிரிக்க அலை அலையாய் அலைந்துகொண்டு இருக்கிறாய்? இங்கு இறப்பதற்கு இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம் இறந்த பின் சிந்துவதற்கு கண்ணீர் தான் இருப்பில்லை ... - [...]

